SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Tuesday, May 20, 2008

மனைக் தக்க மாண்புடையள்



வாழ்க்கைத் துணைநலம்
The Worth of a Wife

51 மனைக் தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

51 A good housewife befits the house,
Spending with thrift the mate's resource.

பதவுரை:
மனைத்தக்க - வீட்டுக்குத் தகுந்த, மாண்பு உடையள் ஆகி - சிறப்புடையவளாகி, தன் கொண்டான் வளம் தக்காள் - தன்னை இல்லாளாகக் கொண்டவனுடைய செல்வ நிலைக்குத் தகுந்த படி நடந்துகொள்பவள், வாழ்க்கைத் துணை - இல்வாழ்க்கைக்குத் (தக்க) துணை ஆவாள்.

பொழிப்புரை:
குடும்பத்துக்குத் தகுந்த பெருமையுள்ளவளாகித் தன் கணவனுடைய செல்வ நிலைக்குத் தகுந்த குடித்தனம் நடத்தக்கூடிய மனைவி தான் இல்வாழ்க்கைகுச் சரியான துணை ஆவாள்.

விளக்கம்:
இங்கே 'துணை' என்பது 'உபகாரி' என்ற பொருளில் சொன்னதல்ல, 'துணை' என்பது, 'துணைபதம்' - 'துணைக்கரம்", என்பன போல ஒரே காரியத்தை ஒரே நோக்கத்துடன் செய்யும் ஒரே மாதிரியான இரண்டில் ஒன்று என்று பொருள் தருவது. வாழ்க்கைத் துணை - இல்வாழ்க்கைக்குச் சரியான 'ஜோடி' அல்லது 'ஜதை' தொழில் வேற்றுமையால் வீட்டுக்கு வீடு, பெருமை வேறுபடும். ஆதலால் 'மனைத்தக்க' என்பது 'தான் புகுந்த வீட்டுக்குத் தக்க' என்ற பொருள் தருவது. குடும்பத்தின் பெருமைக்குக் காப்பாள் மனைவிதான்.


Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, April 8, 2008

கொக்கொக்க கூம்பும்




காலமறிதல்
KNOWING PROPER TIME

490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.

490 In waiting timefeign peace like stork
In fighting time strike like its peck.

பதவுரை:
கூம்பும் பருவத்து கொக்கு ஒக்க: மற்று சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - (காலங்கருதி) ஒடுங்கியிருக்க வேண்டிய போது கொக்கைப்போல அசைவில்லாமல் இருக்க வேண்டும், சரியான காலம் வாய்த்த போது அந்தக் கொக்கின்கொத்துலைப்போல் உடனே செய்துவிடவேண்டும்.

பொழிப்புரை:
காலங்கருதி ஒடுங்கியிருக்க வேண்டியவரையிலும் ஒரு கொக்கு தன் இரையைக் கொத்த அசையாமல் வாடி இருப்பதைப் போல் கலங்காமல் இருக்க வேண்டும். தக்க சமயம் வாய்த்த உடனே அந்தக் கொக்கு தன் இரையை நறுக்கென்று கொத்திக்கொள்வது போல் சட்டென்று செய்துவிடவேண்டும்.

விளக்கம்:
'ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கு' என்பது போலத் தக்க சமயம் வருகிறாவரயிலும் அடங்கியிருக்க வேண்டும். சமயம் வாய்த்த உடன் கொக்கு கொத்துவதைப் போல விரைவாகச் செய்துவிட வேண்டும்.

Get this widget | Track details | eSnips Social DNA

Hyderabad Meet Photos Slide Show