SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Thursday, September 20, 2007

தொட்டனைத்தூறும்கல்வி

396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

EDUCATION
396 As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.

பதவுரை:
தொட்ட அனைத்து மணல் கேணி ஊறும், மாந்தர்க்கு கற்ற அனைத்து அறிவு ஊறும் - தோண்டிய அளவுக்கு மணல் கிணற்றில் நீர் ஊறும், அதுபோல்) மனிதர்கள் கற்கின்ற
அளவுக்கு அறிவு உண்டாகும்.

பொழிப்புரை:
எவ்வளவுக்கெவ்வளவு தோண்டுகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு மணல் கேணியில் நீர் ஊறும் அதுபோல எவ்வளவுகெவ்வளவு கல்வி கற்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அறிவு உண்டாகும்.

விளக்கம்:
மணற்கேணி என்பது ஆற்று மணலில் பறிக்கும் ஊற்றுப்பள்ளம். பாலு அவர்களின் விளக்கம்:
சித்திரம் கைபழக்கம் செந்தமிழ் நாபழக்கம், இது முன்னோர் வாக்கு, பாடப்பாட ராகம் வரும் பார்க்க பார்க்க மோகம் வரும், கவிஞர் வாலியின் வாக்கு. இதையே வள்ளுவர் வேற மாதிரி
சொல்கிறார் தோண்டத் தோண்ட தண்ணீர் வரும் நல்ல புத்தகங்கள் படிக்கப் படிக்க அறிவு வளரும் அப்படின்னு சொல்றார். இவங்க மாதிரி வாழ்ந்தவங்க பெரியோர் ஜி.என்.பாலசுப்ரமணியம் பாட்டையும் கேட்கனும் அடியேன் அற்பன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட்டையும் கேட்கனும். முகமது ரபியின் மெலோடியும் கேட்கனும், ஏ.ஆர்.ரஹ்மான்
மேஜிக்கையும் தெரிஞ்சுக்கனும், அப்பத்தான் இசை அறிவு நல்ல வளரும். என்பது அடியேனின் அபிப்ராயம். ஸோ நாம் நிறைய படிப்போம், நிறைய பாட்டு கேட்போம், அறிவை
உயர்த்திக்கொள்வோம். கேட்கிறதுல, படிக்கிறதுல ரொம்ப ரொம்ப லாபம் இருக்கு. இப்ப வந்து கேட்கிறது ஜாஸ்தி ஆகிடுச்சு, படிக்கிறாது ரொம்ப கம்மி ஆகிடுச்சு அப்படின்னு பீல் பன்றேன். படிக்கிறது என்பது ரொம்ப ஓர் அழகான படைப்பு படிக்கிறாது ஓர் ஹாபி, புத்தகங்கள் எந்த மொழியில் இருந்தாலும் படிச்சு நிறைய விஷயங்கள், நிறைய தத்துவங்கள், நிறைய சாஸ்திரத்துக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எத்தனையோ நாம் கற்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் இந்த காலத்துக்கு வந்து வீடியோ தான் ஜாஸ்தியா நம்ப மேல அதோட பிரதிபலிப்பு காணப்படுகிறது. பார்த்து நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டிருக்கிறோம். ஆணால் Nothing
like Read, Study, Reading is very very important. நமக்கு எப்ப தேவைபட்டாலும் புக் வங்கறது நம்ம கையிலே ஒரு பொக்கிஷமாக இருக்கனும். மறந்துபோனாலும் ஏதாவது
ரெப்ரன்ஸ் வேணுமின்னா புரட்டிப் பார்க்கலாம். ஸோ புத்தகம் என்பது அழகான ஒரு நண்பன். அந்த காலத்திலே வந்து சின்னவங்களா இருந்தாலும், பெரியவங்களா இருந்தாலும் படிப்பு, படிக்கிறது புத்த்கம் ரொம்ப கம்மியாப்போச்சு, அத ரொம்ப இம்ப்ரூவ் பன்றது விஷயமாக இருக்கு. அதனால, இப்ப பாருங்க தொழில் நுட்பத்திலே வந்து எத்தனையோ சாதனைகள் புரிஞ்சிட்டோம், உல்கமெல்லாம் வானோலி மூலமா, டி.வி மூலமா, சேட்லைட் மூலமா இருந்தாலும் புத்தகம் எவ்வளவு வேல்யு, புத்தகம் தான் இதெல்லாம் கூட
கைப்பற்றுங்கள். கேட்டதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி.

Get this widget | Share | Track details

Monday, September 10, 2007

மோப்பக்குழையும்விருந்தோம்பல்
90. மோப்பக்குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

Hospitality
Anicham smelt withers: like that
A wry-faced look withers the guest.

பதவுரை:
மோப்ப குழையும் அனிச்ச, - முகர்ந்த உடனேயே வாடிப்போக்கும் அனிச்சம் என்ற மலர், முகம் திரிந்து நோக்க குழையும் விருந்து - கோணிய முகத்தோடு பார்த்த உடனேயே விருந்தாளியின் உள்ளம் வாடிவிடும்.

பொழிப்புரை:
அனிச்ச மலர் நாம் முகூர்ந்த உடனேயே வாடிவிடும். விருந்தினரின் உள்ளம் நாம் தோணிய முகத்தோடு அவர்களைப் பார்த்துவிட்டாலே உடனே வாடிவிடும்.

விளக்கம்:
அனிச்சமலர் என்பது மிகவும் நுட்பமான சுபாவமுடைய மலராக இலக்கியங்களில் சொல்லப்படுகிற ஒரு மலர்.

பாலு அவர்களின் விளக்கம்:
பலர் வீட்டுக்கு போனா போனவுடனே வாங்க வாங்க உட்காருங்க என்ன சாப்பிடுறீங்க இப்படி நான்ஸ்டாப்ல மரியாதை கிடைக்கும். நாம ஒன்றும் வேண்டான்னு சொன்னாக்கூட உடமாட்டாங்க. இல்லை எதாவது சாப்பிடுங்க குடுப்பாங்க, இதுதான் விருந்தோம்பல். இன்னும் சிலர் பேர் இருக்காங்க அவங்க வீட்டுக்கு போனா கிடைக்கிற மரியாதையே வேற அப்புறம் காபி, டீ சாப்டறீங்களா? டீ, கீ சாப்பிடறீங்களா? வெயில இதெல்லாம் நீங்க சாப்பிடுவீங்களா? அப்படீம்பாங்க. இவங்க வீட்டுக்குப்போனா அனிச்ச மலர் மாதிரி இருக்கிற நம்ம முகம் வாடிப்போயிடும்ன்னு சொல்றார் நம்ம வள்ளுவர். பாவம் அவருக்கு என்ன அனுபவமோ அதனால நம்ம வீட்ல பச்சத்தண்ணீர் இருந்தாக்கூட வந்தவங்களூக்கு அன்போட சிரிச்சிக்கிட்டே கொடுப்போம். கேட்டதற்க்கு நன்றி நன்றி.

Get this widget | Share | Track details

Hyderabad Meet Photos Slide Show