SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Wednesday, August 1, 2007

அகழ்வாரைத் தாங்கும்.



பொறையுடைமை

151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை..

Forgiveness

151 As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.

பதவுரை:

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - குழி தோண்டுகிறவர்களையும் சுமந்துகொண்டிருக்கிற பூமியைப்போல, தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை - நம்மை அவமதிக்கிறவர்களை மன்னித்து விடுதல் தலைசிறந்த குணம்.

பொழிப்புரை:
குழி தோண்டுவதற்குத் தன்னையெ வெட்டுகிறவர்களையும் சுமந்து கொண்டிருக்கிற பூமியை போல, தம்மை அவமதிக்கிறாவர்களை மன்னித்துவிடுதல் மிகவும் சிறந்த குணம்.

விளக்கம்:
பூமியானது தன்னை வெட்டுகிறவனைத் தானே சுமந்து கொண்டிருப்பது போல, உயர்ந்த குணமுடையவர்கள் தங்களை அவமதித்தவர்களை மன்னித்துவிடுவது மட்டுமல்லாமல் வேறு உதவியும் செய்வார்கள் என்பது கருத்து.

பாலு அவர்களின் விளக்கம்:
இருப்பதிலேயே ரொம்ப சுலபமான வேலை அடுத்தவங்கள விமர்சனம் பன்றது. ரொம்ப கஷ்டமான வேலை அடுத்தவங்களை வர்ணிக்கிறது விமர்சனம் செய்றவன் மனுசன், மன்னிக்கிறவன் கடவுள் அதனாலதான் நாம் கடவுளே மன்னிசுடு, கர்த்தரே என்னை மன்னிசுடு என்று வேண்டுகிச்றோம். கடவுளாக் ஒவ்வொரு மனுசனும் மாறனுங்கறது வள்ளுவரோட ஆசை. இந்த பூமி மாதாவை வெட்டி வீழ்த்தி தங்கம், நிலக்கரி எடுக்கறோம் தோண்டி தோண்டி வீடு கட்டுகிறோம் பூமிமாதா பொருமையுடன் தாங்கி நம்மை மன்னிகிறது. அதுபோல நாமும் பகைவரை மன்னிக்கும் பண்பை கொள்வோம். கேட்டதற்க்கு நன்றி.

Get this widget | Share | Track details

5 comments:

magisivappa said...

This shares the view of "Inna seytharai oruthal avar naana nannayam seythuvidal".

Goodness rendered in a good way by a good man.

Thank you

Covai Ravee said...

Thanks Magi madam. Chennaiyil unga kitta athikam pesa mudiyamaikku mikavum varuthukiren. Thankalin anbukku nandri pala.

usha said...

Hi Ravi Sir,
Thanks for giving such a nice kural after a long gap. inda kural manidahtanmayai unarthum oru kural. Neengal deyvamaaga maaravendam, muyarchithaal manidanaagavaavadu vaazha muyarchiseyyasollum oru kural. Boomiyai pol porumay kadaipidithu namakku theengu seybavarkum nanmay seyya sollukinra indha kural romba super.Thank u Sir for S.P.B.Sir and U.

usha said...

hello Ravi Sir,
Theengu seybavarkum nanmai seyya sollum inda kural superb. mudalil nammidam manidathanmai vandaal indha gunamum vanduvidum enbadu en nambikkai. Neenga enna solreenga Sir? S.P.B .Sir avargalukkum,indha kuralai kodutha ungalukkum enn nanri.

Covai Ravee said...

உஷா மேடம்,
இந்த பதிவின் நோக்கமே வரப்போகும் குழந்தைகளுக்கு திருக்குரள் மனதில் நன்றாக பதிய வேண்டுமே என்ற என் ஆசை தான். அதுமட்டுமல்லாமல் மகி மேடம், தங்களைப்போல் படித்தவர்கள். நல்ல தகவல்களை தருவது அவங்க மேலும் படிப்பதற்க்கு உற்சாகத்தை தரும். பாலுஜி எல்லா குறள்களையும் பாட வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா என்று எனக்கு தெரியவில்லை. வருகைக்கு நன்றி.

Hyderabad Meet Photos Slide Show