SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Monday, August 27, 2007

தெய்வம் தொழால்
வாழ்க்கை துணைநலம்

55 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

The Worth of a Wife
55 Her spouse before God who adores,
Is like rain that at request pours.

பதவுரை:
தெய்வம் தொழாஅன் - தெய்வத்தை வணங்க மாட்டாள், தொழுதள் தொழுது எழுவாள் - கணவனை வணங்கி எழுந்திருப்பாள், பெய் எனப் பெய்யும் மழை - அவள் பெய் என்று சொன்ன உடனே மழை பெய்யும்.

பொழிப்புரை:
கற்புடைய பெண், தெய்வத்தைக்கூட வணங்க மாட்டாள் தெய்வத்துக்குப் பதிலாகத் தினத்தினம் காலையில் கணவனைத் தொழுதுவிட்டுத்தான் படுக்கையை விட்டு எழுதிருப்பாள், அவள் 'பெய்; என்று சொன்ன உடனேயே மழை பெய்யும்.

விளக்கம்:
'கற்பு' என்பது கணவனைத் தவிர வேறு ஆண்களை இச்சிக்காத குணம் மட்டும் அல்ல; அதற்கும் மேலான ஒரு தெய்வீக சக்திவாய்ந்த பெண்மைதான் இங்கே 'கற்பு' என்று சொல்லப்படுகிறது. அந்தச் சக்தி, கணவனையே தெய்வமாக வணங்கி, அவனுடைய விருப்பமே தன் விருப்பமாகவும், அவனுடைய ஷேமமே தன்னுடைய ஷேமமாகவும், அவனுடைய நோக்கமே தன்னுடைய நோக்கமாகவும் கொண்டு தன்னுடைய எல்லா உரிமைகளையும் கணவனுக்குள் அடங்கினதாக, நம்பி, அந்த உறுதியில் சிறிது பிறழாமல் நடந்துகொள்ளும் பென்களுக்கு உண்டாவதாக நம்பப்படுவது. அதே அர்த்தத்தில் தான் தலைசிறந்த தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றிலும் 'கற்பு' என்றா சொல் கையாளப்பட்டிருக்கிறது. அப்படி நம்புவது சரியா அல்லவா என்ற விஷயம் வேறு. அந்த ஆராய்ச்சியில் இறங்கிவிடக்கூடாது. ஆனால் 'கற்பு' என்ற சொல்லை முன் சொல்லப்பட்ட தெய்வீக சக்தியுடைய பெண்மையைக் குறிக்கும் பொருளில்தான் வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. அதே பொருளைத் தொடர்ந்து தான் கம்பரும் 'மாதரார் கற்பின் நின்றன காலமாரியே' என்று பாடியிருக்கிறார். அந்தப்பொருளை ஒத்துக்கொண்டுதான் இந்தக் குறளுக்கு அர்த்தம் செய்ய வேண்டும். அப்படி அர்த்தம் செய்தால் திருவள்ளுவர் பெண்களை ஆண்களூக்கு அடிமைகளாகப் பேசியிருக்கிறார் என்றா அறியாமை அகன்று போகும்.

கணவனை தெய்வமாகத் தினமும் வணங்கி, தெய்வீக சக்தி பெறும் 'கற்பு' என்பது உலகத்தில் மிகவும் அரிது. அப்பரிபட்ட கற்புள்ள பெண்ணேதான் வாழ்க்கைத்துனையாக வரவேண்டுமென்று விரும்புவது முடியாத காரியம். ஆகையால் எல்லாப் பெண்களூக்கும் எளிதானது என்று நினைக்கும்படியாகச் சொல்ல வேண்டுமானால், மனைவிக்குக் குறைந்த பட்சமாக இருக்கவேண்டிய குணம்.

பாலு அவர்களின் விளக்கம்:
கணவனே கண்கண்ட தெய்வம், மனாளனே மங்கையின் பாக்கியம், இதெல்லாம் சினிமா படங்கள் நினைச்சா. நம்முடைய பன்பாடு, நம்முடைய கலாச்சாரம் அதத்தான் சினிமா படம் எடுத்து தலைப்பா வச்சாங்க. கணவனை கடவுளா நினைசவங்க, நினக்கறவங்க நம்ம தாய்மார்கள், ஒரு குழந்தையை பத்து மாசம் சுமக்கிறவ பெண். ஆனால் ஒரு குடும்பத்தை ஆயுசுக்கும் சுமக்கிறவன் ஆண். அதனாலத்தான் நம்ம தாய்மார்கள் அவன் தப்பு செய்றபுருஷனா இருந்தாக்கூட அத பொருத்துக்கிட்டு கடவுளா நினக்கிறாங்க. அப்பேர்பட்ட பெண்கள் மழையே வா அப்படின்னா வந்துடுமாம். அதுக்காக இந்த திருக்குறளை ஆண்கள் மிஸ்யூஸ் பன்னிட்டு இஸ்டத்துக்கு நடந்துக்ககூடாது. சாதாரணமாக இருக்ககூடிய கணவனுக்கு சொன்னேன் அவ்வளவுதான். தவறு இருந்தா திருத்திகிட்டு மனைவிக்கு கடவுளா காட்சிதரனும். தன் குடும்ப கடமையை ஒழுங்கா செய்யனும் அப்படின்னு சொல்றாரு குறள் மன்னன் சக்கரவர்த்தி இந்த குறளூக்கு மட்டுமே அல்ல அந்த குறள் மூலமாக அவர் கொடுக்கிற ஆசிகள், அபிப்ராயங்கள் ஒவ்வொரு வாரத்துக்கும் கூட முக்கியமானது. சும்மா நான் ம்யுசிக்கலா பாடறேன் அதன் வார்த்தையை சொல்றேனு கேட்டுட்டு போகாமே அதை கடைப்பிடிச்சு யூஸ் பன்னனும் நம் வாழ்க்கையிலே. கேட்டதற்க்கு மிக்க நன்றி.

Tuesday, August 21, 2007

குணம்நாடிக் குற்றமும் நாடிதெரிந்து தெளிதல்

504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

TESTING OF MEN FOR CONFIDENCE

504 Good and evil in man weigh well
Judge him by virtues which prevail.

பதவுரை:
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் - குணத்தை ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை ஆராய்ந்து அதிகமானது எதுவோ அதைக்கொள்ள வேண்டும்.

பொழிப்புரை:
ஒருவனுடைய நல்ல குணத்தை ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து எது அதிகமோ அதைக்கொண்டு (தீர்மானிக்க வேண்டும்).

விளக்கம்:
எல்லாருக்கும் நல்ல குணமும் உண்டு, கெட்ட குணமும் உண்டு. நல்ல குணம் அதிகமாக உள்ளவனை நல்லவனாகவும் கெட்ட குணம் அதிகமாக உள்ளவனை கெட்டவனாகவும் கொள்ள வேண்டும். 'குணம்' என்பது 'நல்ல குணம்' 'குற்றம்' என்பது இங்கே 'தீய குணம்'.

பாலு அவர்களின் விளக்கம்:
இதன் அர்த்தங்கள் கோபம் இருக்கிற இடத்துல குணமும் இருக்கும், சிரிக்கிற கண்கள் தான் முறைக்கவும் செய்யும், அடிக்கற கைகள் தான் அணைக்கவும் செய்யும். எந்த மனுசனக்குள்ளேயும் குணமும் உண்டு , குறையும் உண்டு. குணம் 'A' செக்ஷன் என்றால், குறை 'B' செக்ஷன். ஒருத்தரை ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கறதுக்கு முன்னாலே அவனுடைய நல்ல குணங்களை 'A' செக்ஷன்லயும் குறைகளை 'B' செக்ஷன் லயும் லிஸ்ட் அவுட் செய்து பார்க்கனும். நிறைய நல்ல குணங்கள் இருந்து கம்மியா குறைகள் இருந்தால் அவரை நாம ஒ.கே. பன்னலாம். இந்த காலத்துக்கும் தேவையான ஒரு பெர்ஷனல் மேனேஜ்மெண்ட் உள்ளேயே வள்ளுவர் என்ன அழகாக சொல்லியிருக்கிறார்.

Get this widget | Share | Track details

Monday, August 13, 2007

அறங்கூறான் அல்ல
புறங்கூறாமை

181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

Against Slander
181 Though a man from virtue strays,
To keep from slander brings him praise.

பதவுரை:
ஒருவன் அறம் கூறான் செயினும் - ஒருவன் அறம் எனப்தன் கூறுபாட்டின்படி அறம் அல்லாதவறாறைச் செய்கிறவனானலும் புறங்கூறான் என்றல் இனிது - அவன் கேரள சொல்லமாட்டான் என்பது இன்பமுண்டாக்கதக்கது.

பொழிப்புரை: ஒருவன் தர்மம் என்றா இனத்தை சேராத செயல்களைச் செய்கின்றவனாலும் அவன் கோள் சொல்லமாட்டான் என்பது மெச்சத்தக்கது.

விளக்கம்:
'அறம் கூறான்' என்பதிலுள்ள 'கூறான்' என்பது 'சொல்லமாட்டான்' என்றா பொருள் தருவதல்ல (கூறு + ஆண்). 'கூறு' என்பது இங்கே 'கூறுபாடு' அல்லது 'பாகுபாடு' என்ற பொருள் தருவது. ஆதலால் 'அறம் கூறான' என்பதற்கு 'அறம் என்றா பாகுபாட்டின்படி' என்பது பொருள்.

அறத்தை சேராத செயல்களைச் செய்கின்றவனானாலும் அவன் கோள் சொல்லாதவனாக இருத்த இனியது.

பாலு அவர்களின் விளக்கம்:
உலகத்திலேயே ரொம்ப உயர்ந்த விஷயம் தானம் கொடுக்கறது. உலகத்திலேயே ரொம்ப கெட்ட விஷயம் போட்டுக் கொடுக்கிறது. தானம் செய்யாட்டி பரவாயில்லை தயவு செய்து அடுத்தவங்கள போட்டுக் கொடுக்காதீங்க. நீங்க நல்லது செய்யாட்டியும் பரவாயில்ல, தொல்லை செய்யாதீங்க சொல்றார் வள்ளுவர். ப்ராபவே அதபத்தி கூட கவலை படறது கிடையாது அடுத்தவங்க என்ன பன்றாங்க, அவங்க வீட்க்கு யார் வற்றார், இது தான் தவறு. இருபது மணி நேரம் அடுத்தவங்கள இட்டு கட்டி பேசறது இவங்க வேல. இந்த பழக்கம் நாளாக ஆக ஒரு மனோ வியாதியாகிவிடும். அதனால அடுத்தவங்கள நாம புறம் பேச வேண்டாம். முடிஞ்சா அவங்களபத்தி நல்ல விஷயங்களைப் பற்றி பேசுவோம். அப்படிங்கறார் வள்ளுவர். நல்ல விஷயங்கள் யாரு சொன்னாலும் கேட்க வேண்டியது தானே. அதுவும் வள்ளூவர் சொல்லும் போது. நாம யாரு பஸ்ல வள்ளுவர் பொம்ம பார்க்கிறோம். அதுல பொம்ம வச்சு அதுல எழுத்தெல்லாம் பார்த்துட்டு அப்படியே விட்டுவிடக்கூடாது. தமிழுனுக்கு தந்தையானவர் அதுமட்டுமல்ல அவங்க வாழ்க்கையில நடந்த அனுபவத்தை வச்சு இன்றைக்கு கூட புதுப்பாடம் என்ற மாதிரி சில சூழ்ச்சிகள் சொன்ன பெரியவங்களூக்கு வணங்கி இதை கேட்டதற்க்கு உங்களையும் வணங்குகிறேன்.

Wednesday, August 1, 2007

அகழ்வாரைத் தாங்கும்.பொறையுடைமை

151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை..

Forgiveness

151 As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.

பதவுரை:

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - குழி தோண்டுகிறவர்களையும் சுமந்துகொண்டிருக்கிற பூமியைப்போல, தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை - நம்மை அவமதிக்கிறவர்களை மன்னித்து விடுதல் தலைசிறந்த குணம்.

பொழிப்புரை:
குழி தோண்டுவதற்குத் தன்னையெ வெட்டுகிறவர்களையும் சுமந்து கொண்டிருக்கிற பூமியை போல, தம்மை அவமதிக்கிறாவர்களை மன்னித்துவிடுதல் மிகவும் சிறந்த குணம்.

விளக்கம்:
பூமியானது தன்னை வெட்டுகிறவனைத் தானே சுமந்து கொண்டிருப்பது போல, உயர்ந்த குணமுடையவர்கள் தங்களை அவமதித்தவர்களை மன்னித்துவிடுவது மட்டுமல்லாமல் வேறு உதவியும் செய்வார்கள் என்பது கருத்து.

பாலு அவர்களின் விளக்கம்:
இருப்பதிலேயே ரொம்ப சுலபமான வேலை அடுத்தவங்கள விமர்சனம் பன்றது. ரொம்ப கஷ்டமான வேலை அடுத்தவங்களை வர்ணிக்கிறது விமர்சனம் செய்றவன் மனுசன், மன்னிக்கிறவன் கடவுள் அதனாலதான் நாம் கடவுளே மன்னிசுடு, கர்த்தரே என்னை மன்னிசுடு என்று வேண்டுகிச்றோம். கடவுளாக் ஒவ்வொரு மனுசனும் மாறனுங்கறது வள்ளுவரோட ஆசை. இந்த பூமி மாதாவை வெட்டி வீழ்த்தி தங்கம், நிலக்கரி எடுக்கறோம் தோண்டி தோண்டி வீடு கட்டுகிறோம் பூமிமாதா பொருமையுடன் தாங்கி நம்மை மன்னிகிறது. அதுபோல நாமும் பகைவரை மன்னிக்கும் பண்பை கொள்வோம். கேட்டதற்க்கு நன்றி.

Get this widget | Share | Track details

Hyderabad Meet Photos Slide Show