SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Thursday, July 12, 2007

மக்கள்மெய் தீண்டல்

Image and video hosting by TinyPic


புதல்வரைப் பெறுதல்
The Wealth of Children

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

65 Children's touch delights the body
Sweet to ears are their words lovely

பதவுரை:

மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - கரம் பெற்ற குழந்தைகளின் உடல் நம் மேல் படுவது நம்முடைய உடலுக்கு இன்பம், மற்று அவர் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு - அக்குழந்தையின் பேச்சைக் கேட்பது காதுக்கு இன்பம்.

பொழிப்புரை:

நாம் பெற்ற குழந்தைகளீன் உடல் நம்முடைய உடலின் மேற் அடுவது நம்முடைய உடல் உணர்ச்சிக்கு இன்பம் தரக்கூடியது. அவர்களுடைய பேச்சைக்கேட்பது நம்முடைய காதுக்கு இன்பம் தரக்கூடியது.


விளக்கம்:

மக்கள் மெய் தீண்டல் என்பது பெற்றோர்கள் மக்களைத் தீண்டினாலும் சரி அல்லது அவர்கள் பெற்ற மக்கள் வந்து பெற்றோரைத் தீண்டினாலும் சரி, இரண்டும் ஒரே இன்பம்.

மக்கள் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு என்பதில் சொல் என்பது அர்த்தமுள்ள உருப்படியான வார்த்தையாகும். அந்த அர்த்தமுள்ள உருப்படியான வார்த்தைகளடங்கிய பேச்சைக்காட்டிலும் இன்பம் தருவது.

தாம் பெற்ற குழந்தைகளீன் உடல் நம் உடலைத்தீண்டுவது உடலுக்கு இன்பமளிக்கும். நாம் பெற்ற குழந்தைகளின் பேச்சைக்கேட்பது இன்பமளிக்கும்.

Image and video hosting by TinyPic

பாலு அவர்களின் விளக்கம்:

"இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடி அது எங்கிருந்து போதும் அதை நாடி ஓடு" என்று சீர்காழி அண்ணா பாடிய அற்புதமான பாட்டு. இந்த பாட்டுல எதெல்லாம் இன்பம்ன்னு அவர் ஒரு பட்டியலே போடுவார். வள்ளுவர் கிட்ட போய் கேட்டா பிள்ளையே இன்பம்ன்னு சொல்லுவார் அதென்ன இன்பம்? குழந்தைகளோட பிஞ்சு விரல தொட்டுபார்க்கிறது அவர்களை தொட்டு தூக்கி கொஞ்சறது நம் உடம்புக்கு இன்பம். அவர்களோட கல்ளம் கபடமில்லாத பேச்சைக்கேட்கிறது காதுக்கு இன்பம். மத்த இன்பம் எல்லாம் சிற்றின்பம் கூட பிள்ளைகளே பேரின்பம் என்கிறார். அதுல சின்ன சூட்சமமாக சொன்ன விஷயமாக இருக்கலாம். ஆணால் நம்ம மட்டும் கொஞ்ச இதற்கு மேல யோசனை பன்ன வேண்டிய விஷயங்களெல்லாம் நிறைய இருக்கு குழந்தைகளை பத்தி யோசனை பன்னும்போது அவங்களுக்கு, வரப்போற ஜெனரேசனுக்கு நம்ப என்ன பன்னிட்ருக்கிறோம் ஒரு நிமிசம் யோசனை பன்னிங்கன்னா. நான் அடிக்கடி சொல்லுவேன் நம்ப பெரிய்வங்களா வந்து அழகான உலகத்தை அமைச்சு கொடுத்தாங்க நல்ல தண்ணீர், நல்ல காற்று எங்கே போனாலும் நல்ல பசுமையான புல்வெளி எல்லாம் கிடைச்சது நமக்கு. ஆணால் அதெல்லாம் போய் சுத்தமாக நாசம் செய்து எல்லாம் தரையோட நம் குழந்தைகளூக்கு ஒரு தட்டுல கொடுத்திட்டுருக்கிறோம். வருங்காலத்துல அவங்க ஆக்ஸிஜன் மாஸ்கு போட்டு கிட்டுத்தான் ஸ்கூலுக்கு போக வேண்டியது வருமோ என்னவோ நமக்கு தெரியாது. தயவு செய்து யோசனை பன்னுங்க குழந்தைகளெல்லாம் நம் நாட்டையும், உலகத்தையும் காக்கப்போற ஒரு பெரிய சக்தி அந்த சக்திக்கு நம்ம சக்தி உறுதுணையாக இருக்கனும்ன்னா இந்த உலகத்தை வந்து அழியாம இருக்கனும்னா, கலையாக, அழகான ஒரு உலகத்தை கொடுக்கனும். அதற்கு ஏத்த மாதிரி நாம் கோஆப்ரேட் செய்து வழங்கவேண்டிய வேலை செய்யா வேண்டிய கடமை நமக்கு உண்டு. கேட்டதற்கு நன்றி. தேங்க் யூ.Get this widget | Share | Track details

4 comments:

usha said...

Hi Ravi Sir,
mazhalaiyai vida oru inbamaana vishayam inda ulagathileye kidayaadu. oru pazhamozhi irukku, kuzhalinidu, yazhinidu enasollvor,makkaltham mazhalai sol kettariyaadavar. adu maadiridaan inda kuralum. kuzhandai thodumpodu inbham adan mazhalai sol ketkumbothu inbham, mothathil mazhalaye perinbam. Thank u Sir for giving this kural.

magisivappa said...

"குழலிலினிது யாழினிது என்பர் தம் மழலையின் மொழி கேளாதார்" என்னும் வரிகள் நினைவிர்க்கு வருகின்றன.
அவர் குரலில் கேட்கையில் குரளும் இசையாகிறது. இசை வடிவம் மனப்பாடம் செய்வதற்க்கும் நினைவில் வைப்பதற்க்கும் மிகவும் உகந்தது என்று கேட்டிருப்பீர்களே!
ரவி அவர்களே, உங்கள் சேவை பாராட்டுக்கு உரியன.

Covai Ravee said...

உஷா மற்றும் மகி மேடங்களே.

//kuzhalinidu, yazhinidu enasollvor,makkaltham mazhalai sol kettariyaadavar.//

//"குழலிலினிது யாழினிது என்பர் தம் மழலையின் மொழி கேளாதார்" //

அது எப்படிங்க இரண்டு பேரும் சொல்லிவைத்தார் போல் ஒரே மாதிரி எழுதுகிறீர்கள். தங்களீன் உற்சாகத்திற்கு நான் கடமை பட்டிருக்கிறேன்.

தங்களீன் அன்புக்கு நன்றி.

Covai Ravee said...

மகி மேடம்

//அவர் குரலில் கேட்கையில் குரளும் இசையாகிறது. இசை வடிவம் மனப்பாடம் செய்வதற்க்கும் நினைவில் வைப்பதற்க்கும் மிகவும் உகந்தது என்று கேட்டிருப்பீர்களே!//

என் ஆசை மற்றும் இந்த பதிவும் நோக்கமே அது தானுங்க மேடம். என் நினவுகளை எதிரொலித்தற்க்கு மிக்க நன்றி

Hyderabad Meet Photos Slide Show