SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Wednesday, July 4, 2007

பெருமைக்கும்...

Image and video hosting by TinyPic

தெரிந்து தெளிதல்

505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

TESTING OF MEN FOR CONFIDENCE

505 By the touchstone of deeds is seen
If any one is great or mean.

பதவுரை:
பெருமைக்கும் ஏனை ச்றுமைக்கும் தம் தம் கருமமே கட்டளைக்கல் - (நல்ல குணம் என்ற) ஒருமைக்கும் (கெட்ட குணம் என்ற) சிறுமைக்கும் அவரவர்களுடைய செய்கைகளே மாற்றறியும் உரைகல்.

பொழிப்புரை: (நல்ல குணமுடையவர்கள்) என்றா பெருமைக்கும் (கெட்ட குணமுடையவர்கள் என்ற) சிறுமைக்கும் அவரவர்களூடைய செய்கைகளே மாற்றறியும் உரைகல்லாகும்.

விளக்கம்:
யாரையும் அவனுடைய செய்கைகளாலேயே குணமுள்ளவனா என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும், அதைக்கொண்டே அவனை நம்பலாமா கூடாதா என்பதைத் தீர்மானிக்கலாம், இந்தக்குறலில் 'பெருமை' 'சிறுமை' என்பன முன்குறளில் உள 'குணம்' 'குற்றம்' என்பவைகளேயன்றி வேறல்ல. குணம். குற்றம், பெருமை, சிறுமை என்பனவெல்லாம் அருள் முணமாகிய அன்புள்ளவராக இருப்பதையும் இல்லாததையும் பொறுத்ததே. ஆகையினால் அன்பில்லாதவர்களிடத்தில் நம்பிக்கை வைத்துவிடக்கூடாது.

ஒருவனுடைய குணத்தை அவனுடைய செயல்களால் கண்டுகொள்ளலாம். நல்ல குனமுடைய என்ற பெருமைக்கும் கெட்ட குணமுடையவன் என்ற சிறுமைக்கும் அவனவனுடைய செயல்களே மாற்றறியும் உரை கல்லாகும்.

பாலு அவர்களின் விளக்கம்:
உழைச்சு பிழைக்கிறது பெருமை, திருடி பிழைக்கிறது சிறுமை, முயற்சியால் முன்னுக்கு வருவது பெருமை, அடுத்தவன் முதுகுல ஏறி வருவது சிறுமை, நாம பெரிய மனுசனா? சின்ன மனுசனா? நாம செய்ற காரியம் அதைச் சொல்லும். இதைத்தான் இன்னொரு கவிஞர் இப்படிச்சொன்னார் "உழைத்து வாழ வேண்டும் பிறை உழைப்பில் வாழ்ந்திடாதே". ஒரு வீட்ல
ஒரு ரோடு ஓரத்துல செடி வைக்கிறவன் பெரிய மனுசன். அது பத்து பேருக்கு காய் கொடுக்கும் பழம் கொடுக்கும். ஓடற ரயில்ல வெடி வைக்கிறவன் சின்ன மனுசன் அவன் உயிரை வாங்குறான். வெடி வைக்கிறவங்களுக்கு நாமெல்லாம் ஒற்றுமையா இருந்து வேட்டு வைப்போம், நாட்ட காத்து நிற்போம். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்.

PERUMAIKKUM 21.4....

3 comments:

முத்தமிழ் said...

முத்தமிழ்மன்றத்தில்(www.muthamilmantram.com) உங்கள் பதிவுகளை இப்போது பார்க்க முடியவில்லையே ரவி?

என்னாயிற்று?

Covai Ravee said...

உடனடி வருகைக்கு மிக்க நன்றி முத்தமிழ் அவர்களே,

பாலு அவர்களின் மூன்று தளங்களில்
www.myspb.blogspot.com
www.spbkural.blogspot.com
www.spbdevo.blogspot.com போன்ற
பதிவுகள் வேலை மற்றும் என் வேலை பளூவால் நேரம் ஒதுக்க முடிவதில்லை. நிச்சயம் உங்கள் தளத்தில் பாடல் வரிகள் பகுதியில் வருவேன். தற்போதுதான் இந்த பதிவு போட்டேன் உடனடி மறுமொழியினால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அடிக்கடி வாங்க சார்.

usha said...

Hi Ravi Sir, romba nalla explanation kudithirukkinga. S.P.B.voice-le konjal thamizhil inda kural ketkaradukku romba nalla irundau. asusual kuraloda karuthu eppozhudum supar.

Hyderabad Meet Photos Slide Show