SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Friday, June 22, 2007

கொல்லான் புலாலை

Image and video hosting by TinyPic
1.3.2. புலான் மறுத்தல்
1.3.2 Abstinence from Flesh
260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

260:All lives shall lift their palms to him
Who eats not flesh nor kills with whim.

பதவுரை:
கொல்லான் புலாலை மறுத்தாளை - (ஊண் உண்பதற்காகச்) கொலை செய்யதவனாகவும் (பிறர் கொன்று வரும்) புல்லாலையும் வாங்கியுண்ண மறுக்கின்றவனாகவும் இருக்கிறவனை, எல்லா உயிரும் கை கூப்பி தொழும் - எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும்.

பொழிப்புரை:
புலால் உண்பதற்காகப் பிறிதொரு பிராணியைத் தானும் கொல்லான், பிறர் கொன்று விற்கும் புல்லாலையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அப்படிப்பட்டவனை எல்லா உயிர்களும் கை குவித்ஹ்டு வணங்கும்.

விளக்கம்:
'கை கூப்பி எல்லா உயிரும் தொழும்' என்றதனால் 'எல்லா உயிரும்' என்பது சிறப்பாக எல்லா மனிதர்களும் என்றதைக் குறிக்க்குகென்றாலும், எல்லா சீவராசிகளும் தொழும் என்பதும் அழகுடையது. 'தொழும்' என்பது அவனை வந்து வணங்க்கும் என்பதல்ல. அவன் எல்லா உயிர்களும் வணங்கத் தகுந்தவன் என்பதுதான் கருத்து, இதிலுள்ள 'கொல்லான்' என்பதற்கு ஊன் உண்பதற்காகப் பிராணிகளைக் கொல்லான் என்பதுதான் பொருள். வேறு விதமான கொலகள் இதில் அடங்கினவல்ல.

புலாலுக்காகக் கொல்லாதிருப்பவனும் பிறர் கொன்று விற்கிற புலாலை உண்ணாதிருப்பவனும் எல்லாச் சீவராசிகளாலும் வணங்கத்தக்கவன்.

பாலு அவர்களின் விளக்கம்: வெஜிடேரியனா இருந்தால் எல்லா ஜீவராசிகளும் உங்களை கையெடுத்து கும்பிடும். அப்பா சாமி என்ன காப்பத்திட்டார் என்னை கொல்லாமா இருக்கியே நீ தான் கடவுள். அதனாலே உயிர கொல்லாதேன்னு சொல்றார் வள்ளுவர். புத்தரும் அதைத்தான் சொன்னார். மகாவீரர் அததான் சொன்னார். அருட்பெருஞ்சோதியும் அததான் சொன்னார். மருத்துவ ரீதியா வெஜிடீரியனா இருக்கிறதல்ல பல சவுகிரியம் இருக்குது. நான் வெஜிடேரியன் இருக்கிறதாலே சில சிரமங்கள் இருக்குது. எந்த ஒன்றையும் படைக்க நமக்கு உரிமை இருக்கு. கொல்ல உரிமை கிடையாது. சோ வள்ளுவர் சொன்னார் உயிர் கொல்லாததை கடை பிடிப்போம். நான் வெஜிடிரேயனா இருக்குறவங்களூக்கு என் மேலே கோவம் வரும். இப்ப வைத்திய சாஸ்திரம் அத வச்சு பார்த்தாக்கூட கொலஸ்ட்ரால் இதெல்லாம் ஜாஸ்தி ஆகிறது மாமிசம் சாப்பிடறதனாலன்னு சொல்றாங்க. வெஜிடேரியன்ல இல்லாத ஒன்றும் நான் வெஜிடேரியன்ல கிடையாது. ருசி பார்த்தா எல்லாம் ஒன்னுதான், உடம்புக்கும் எல்லாம் ஒன்னுதான். ஆணால் தீமை செய்றது கொஞ்சம் பக்கத்துல வக்கிறதுல தப்பே கிடையாது. கேட்டதற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி.

Get this widget | Share | Track details

4 comments:

usha said...

a nice kural about not eating of non-veg. I m a pure vegetarian. I used to tell everybody not to eat non-veg. Don't kill the animals to eat or for anything. Nice explanation by S.P.B.Sir.Thank u very much for giving this kural.

கோவை ரவீ said...

Thank you very much usha madam.

magisivappa said...

நானும் புலால் உண்ணா வர்க்கம் தான். ஓர் உயிரை எடுக்கவோ அதனை அழிக்கவோ ஸ்ருஷ்டித்தவன் நமக்கு தகுதியைக் கொடுக்கவில்லை. நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளூம் அந்த சக்தி அழிவுக்கு வித்து.

கோவை ரவீ said...

மகி மேடம். நீங்க சரியாதான் சொன்னீங்க. பரவாயில்லையே ஒரே நாளில் தங்கிலிஸ் தட்டச்சு செய்ய கற்று கொண்டீர்களே. இனி தமிழில் உங்கள் கவிதை வரிகளை அதிகம் படிக்கலாம். வாத்தியரம்மா வாத்தியரம்மா தான்.

Hyderabad Meet Photos Slide Show