SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Tuesday, June 19, 2007

மங்கலம் என்ப...

Photo Sharing and Video Hosting at Photobucket

வாழ்க்கைத் துணைநலம்
The Worth of a Wife
60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
60. An honest wife is home's delight
And children good are jewels abright.

பொழிப்புரை:
மங்கலம் என்ப - குடும்பத்துக்கு நல்வாழ்வு என்று சொல்லப்படுவது, மனைமாட்சி - மனையாளின் பெருமையே மறு அதன் நன் கலம் நல் மக்கள் பேறு - அதன் பின் அந்த நல்வாழ்விற்கு நல்ல ஆபரணம் ஆவது நல்ல மக்களைப் பெறுதல்.

விளக்கம்: குடுபத்துக்கு எல்லா நன்மைகளையும் உண்டாக்கக்கூடிய மங்கலை பொறுள் மனையாளின் பெருமைதான். அந்தப் பெருமைக்கு அழகு தரும் ஆபரணமாவது நல்ல மக்களைப் பெறுவது.

பாலு அவர்களின் விளக்கம்:
தாயிக்குப்பின் தாரம் இத பெரியவங்க சொன்ன உண்மை. நம்மள வரமா பெற்றெடுத்தவ தாயி, நம்மள பலமா மாற்றிக்காட்றவ தாரம். அதனால தான் கவிஞர் கண்ணதாசன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்றார் வாழ்க்கையோட அழகே உனக்கு கிடைக்கிற நல்ல மனைவி தான் என்று சொல்றார் வள்ளுவர். மனைவிக்கு அடுத்த படியா வேறு என்னவென்றால் நல்ல பிள்ளை என்று சொல்றார். இத சொல்லும் போது சீர்காழி அண்ணா பாடிய ஒரு பாடல் தான் நினவுக்கு வருது "நல்ல மனவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் அதுவே. இந்த தெய்வீகம் எல்லோருக்கும் அமைய இறைவனை வேண்டிக்கொள்வோம். கேட்டதுக்கு நன்றி, நமஸ்காரம்.

Get this widget | Share | Track details

2 comments:

usha said...

Hi, nice family photo of our guruji. nice thirukkural,and explanation with cute examples of kannadasan and others in the voice of S.P.B. Thank u for giving importance to a lady & publish this kural.

கோவை ரவீ said...

உஷா மேடம். இந்த திருக்குறள் பாடல் சென்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை அன்று ஒளிப்பரப்பியது ஞாயிறு நடுநிசியில் இந்த கோப்பை சேகரித்தேன். பாடல் கேட்டதும் உடனே பதிய வேண்டும் என விரும்பினேன். இதற்கு முன் பாடல்கள் இருந்தும் இதை உடனே பதிய வேண்டுமென எனக்கு தோன்றியது. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க மேடம்.

Hyderabad Meet Photos Slide Show