SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Wednesday, June 27, 2007

இன்னாசெய்தாரை

Image and video hosting by TinyPic

இன்னா செய்யாமை

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்த் விடல் : 314

Non Violence
Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm. : 314

பதவுரை:
இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் - தீங்கு செய்தவர்களைத் தண்டிப்பது அவர்கள் வெட்கப்படும் படி அவர்களூக்கு நல்ல உதவிகளைச் செய்துவிடுவது.

பொழிப்புரை:
தீங்க்கு செய்வதை (மாசற்றா மனமுடையவர்கள்) தண்டிக்கிற விதம் எதுவென்றால், அந்தத் தீங்கு செய்தவர்கள் தாமே வெட்கப்பட்டு வருந்தும் படி அவர்களூக்கு நல்ல உதவிகளைச் செய்து விடுவது.

விளக்கம்:
'செய்து விடல்' என்பதற்கு ' செய்து விடுவது' என்பது மட்டுந்தான் கருத்து. 'செய்து' பிறகு அவர்களை ' விடல்' என்று பிரிப்பது அர்த்தமில்லாதது. தீங்கு செய்தவனுக்குத் திருப்பித் தீங்கு செய்யாமல் நன்மைகளைச் செய்தால் அவன் அதனால் நாணமடைந்து தான் செய்துவிட்ட தீமைக்கு வருந்தி வெகு நன்றியுள்ளவனாக மாறிவிடுகிறான். பிறகு தாம் விட்டாலும் அவன் தம்மை விட மாட்டானே: ஆதலால் ' அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் (விடல்) மறுத்தல்' என்று பிரித்து, விரித்துக்கொள்வது பயனற்றது.

தீங்கு செய்தவர்களை நல்லவர்கள் தண்டிப்பது எப்படியென்றால், தீங்கு செய்தவர்கள் தாமாகவே வெட்கப்படும்படி அவர்களூக்கு நன்மை செய்துவிடுவது.

இனி பாடலைத்தொடர்ந்து பாலு அவர்களின் பாணியில் அவரது குரலில் விளக்கம்.

இந்த குறளை கேட்டவுடனே எனக்கு கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் நினவுக்கு வருது. பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டால் அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் நான் இருக்கு நிலையில் உன்னை என்ன கேட்பேன். இனி நன்மையும் செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் அப்படி வாழ்ந்தவர் தான் கண்ணதாசன், வாழச்சொன்னவர் வள்ளுவர் பழிக்குப்பழி ரத்தத்திற்க்கு ரத்தம் என்று வாழாமல் எதிரிகளை மன்னித்து அவங்களே வெட்கப்படும் படி நாம நல்லது செய்யனும், அத தான் வள்ளுவர் நமக்கு சொல்கிறார். அப்படி வாழ்ந்துட்டா மனிதன் என்றும் தெய்வம் ஆகலாம். எவ்வளவு அழகான விஷயங்கள் இந்த காலகட்டத்துக்குள் உபயோகப்பட்றமாதிரி
பெரியவங்க அவங்க அனுபவத்தை வெச்சு, கடவுளோட அனுகிரஹத்த வெச்சு நமக்காக வழங்கிப்போன அந்த விஷயங்கள் கூட கைகொடுத்து அனுபவத்திலும் கொண்டு வந்தா ரொம்ப நன்றாக இருக்கும் கேட்டதற்க்கு மிக்க நன்றி வணக்கம்.

Get this widget | Share | Track details

Monday, June 25, 2007

இனிய உளவாக

Image and video hosting by TinyPic

இனியவைகூறல்

100 இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று

Sweet Words
100 Leaving ripe fruits the raw he eats
Who speaks harsh words when sweet word suits.

பதவுரை:
இனிய உளவாக - இனிய சொற்கள் இருக்கும் போது, இன்னத கூறல் - இனிமைஇல்லாத சொற்களைப் போசுவது,
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று - கனி இருக்கும் போது காயைப் பறிப்பதைப்போன்றது.

பொழிப்புரை:
இனிமையான வார்த்தைகள் வேண்டிய மட்டும் இருக்கும் போது கடுமையான வார்த்தைகளைப்பேசுவது பழங்களை விட்டு விட்டு காய்களைப் பறித்துக்கொள்வது போலத்தான்.

விளக்கம்:
இனிய பழங்கள் நிறைந்த ஒரு மரத்தில் ஏறின ஒருவன் இனிப்பான பழங்களைப் பறித்துகொள்ளாமல், அதிலுள்ள கசப்பும், புளிப்புமான காய்களைப்பறிப்பது எப்படியோ, அப்படித்தான் நல்ல வார்த்தைகளிருக்க அவற்றை விட்டுக்கடுஞ்சொற்களைப்பேசுவது.

ஆகையினால் இனிய வார்த்தைகள் வேண்டிய மட்டும் இருக்கும்போது துன்பமான வார்த்தைகளைப்பேசுவது ஒரு மரத்தில் பழங்கள் வேண்டிய மட்டும் இருக்கப் பழத்தை விட்டுப்பச்சைகாய்களைப் பறித்துக்கொள்வது போலத்தான்.

நூல்களில் இருந்து தரப்பட்ட விளக்கங்களை படித்தீர்கள். இனி பாலு அவர்களின் அவருடைய ஸ்டைலில் விளக்கத்தையும் பாடலைத்தொடர்ந்து கேளுங்கள்.

Get this widget | Share | Track details

Friday, June 22, 2007

கொல்லான் புலாலை

Image and video hosting by TinyPic
1.3.2. புலான் மறுத்தல்
1.3.2 Abstinence from Flesh
260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

260:All lives shall lift their palms to him
Who eats not flesh nor kills with whim.

பதவுரை:
கொல்லான் புலாலை மறுத்தாளை - (ஊண் உண்பதற்காகச்) கொலை செய்யதவனாகவும் (பிறர் கொன்று வரும்) புல்லாலையும் வாங்கியுண்ண மறுக்கின்றவனாகவும் இருக்கிறவனை, எல்லா உயிரும் கை கூப்பி தொழும் - எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும்.

பொழிப்புரை:
புலால் உண்பதற்காகப் பிறிதொரு பிராணியைத் தானும் கொல்லான், பிறர் கொன்று விற்கும் புல்லாலையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அப்படிப்பட்டவனை எல்லா உயிர்களும் கை குவித்ஹ்டு வணங்கும்.

விளக்கம்:
'கை கூப்பி எல்லா உயிரும் தொழும்' என்றதனால் 'எல்லா உயிரும்' என்பது சிறப்பாக எல்லா மனிதர்களும் என்றதைக் குறிக்க்குகென்றாலும், எல்லா சீவராசிகளும் தொழும் என்பதும் அழகுடையது. 'தொழும்' என்பது அவனை வந்து வணங்க்கும் என்பதல்ல. அவன் எல்லா உயிர்களும் வணங்கத் தகுந்தவன் என்பதுதான் கருத்து, இதிலுள்ள 'கொல்லான்' என்பதற்கு ஊன் உண்பதற்காகப் பிராணிகளைக் கொல்லான் என்பதுதான் பொருள். வேறு விதமான கொலகள் இதில் அடங்கினவல்ல.

புலாலுக்காகக் கொல்லாதிருப்பவனும் பிறர் கொன்று விற்கிற புலாலை உண்ணாதிருப்பவனும் எல்லாச் சீவராசிகளாலும் வணங்கத்தக்கவன்.

பாலு அவர்களின் விளக்கம்: வெஜிடேரியனா இருந்தால் எல்லா ஜீவராசிகளும் உங்களை கையெடுத்து கும்பிடும். அப்பா சாமி என்ன காப்பத்திட்டார் என்னை கொல்லாமா இருக்கியே நீ தான் கடவுள். அதனாலே உயிர கொல்லாதேன்னு சொல்றார் வள்ளுவர். புத்தரும் அதைத்தான் சொன்னார். மகாவீரர் அததான் சொன்னார். அருட்பெருஞ்சோதியும் அததான் சொன்னார். மருத்துவ ரீதியா வெஜிடீரியனா இருக்கிறதல்ல பல சவுகிரியம் இருக்குது. நான் வெஜிடேரியன் இருக்கிறதாலே சில சிரமங்கள் இருக்குது. எந்த ஒன்றையும் படைக்க நமக்கு உரிமை இருக்கு. கொல்ல உரிமை கிடையாது. சோ வள்ளுவர் சொன்னார் உயிர் கொல்லாததை கடை பிடிப்போம். நான் வெஜிடிரேயனா இருக்குறவங்களூக்கு என் மேலே கோவம் வரும். இப்ப வைத்திய சாஸ்திரம் அத வச்சு பார்த்தாக்கூட கொலஸ்ட்ரால் இதெல்லாம் ஜாஸ்தி ஆகிறது மாமிசம் சாப்பிடறதனாலன்னு சொல்றாங்க. வெஜிடேரியன்ல இல்லாத ஒன்றும் நான் வெஜிடேரியன்ல கிடையாது. ருசி பார்த்தா எல்லாம் ஒன்னுதான், உடம்புக்கும் எல்லாம் ஒன்னுதான். ஆணால் தீமை செய்றது கொஞ்சம் பக்கத்துல வக்கிறதுல தப்பே கிடையாது. கேட்டதற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி.

Get this widget | Share | Track details

Tuesday, June 19, 2007

மங்கலம் என்ப...

Photo Sharing and Video Hosting at Photobucket

வாழ்க்கைத் துணைநலம்
The Worth of a Wife
60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
60. An honest wife is home's delight
And children good are jewels abright.

பொழிப்புரை:
மங்கலம் என்ப - குடும்பத்துக்கு நல்வாழ்வு என்று சொல்லப்படுவது, மனைமாட்சி - மனையாளின் பெருமையே மறு அதன் நன் கலம் நல் மக்கள் பேறு - அதன் பின் அந்த நல்வாழ்விற்கு நல்ல ஆபரணம் ஆவது நல்ல மக்களைப் பெறுதல்.

விளக்கம்: குடுபத்துக்கு எல்லா நன்மைகளையும் உண்டாக்கக்கூடிய மங்கலை பொறுள் மனையாளின் பெருமைதான். அந்தப் பெருமைக்கு அழகு தரும் ஆபரணமாவது நல்ல மக்களைப் பெறுவது.

பாலு அவர்களின் விளக்கம்:
தாயிக்குப்பின் தாரம் இத பெரியவங்க சொன்ன உண்மை. நம்மள வரமா பெற்றெடுத்தவ தாயி, நம்மள பலமா மாற்றிக்காட்றவ தாரம். அதனால தான் கவிஞர் கண்ணதாசன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்றார் வாழ்க்கையோட அழகே உனக்கு கிடைக்கிற நல்ல மனைவி தான் என்று சொல்றார் வள்ளுவர். மனைவிக்கு அடுத்த படியா வேறு என்னவென்றால் நல்ல பிள்ளை என்று சொல்றார். இத சொல்லும் போது சீர்காழி அண்ணா பாடிய ஒரு பாடல் தான் நினவுக்கு வருது "நல்ல மனவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் அதுவே. இந்த தெய்வீகம் எல்லோருக்கும் அமைய இறைவனை வேண்டிக்கொள்வோம். கேட்டதுக்கு நன்றி, நமஸ்காரம்.

Get this widget | Share | Track details

Thursday, June 14, 2007

தன்னைத்தான் காக்கின்..

Photo Sharing and Video Hosting at Photobucket

1.3.7 வெகுளாமை
1.3.7 Restraining Anger

305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

305. Thyself to save, from wrath away!
If not thyself the wrath will slay.

பதவுரை:
தன்னை தான் காக்கின் சினம் காக்க - ஒருவன் தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் கோபத்தை அடக்கவேண்டும்; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - அடக்காவிட்டால் அந்தக்கோபம் தன்னையே அழித்துவிடும்.

பொழிப்புரை:
ஒருவன் தன்னைத்தானே காப்பற்றிக்கொள்ள விரும்பினால் மனதில் கோபம் உதித்தால் உடனே இடக்கிவிட வேண்டும். அடக்காவிட்டல் அக்கோபம் தனக்கே அழிஉவ் செயுயும்.

விளக்கம்:
கோபம் உதித்த உடன் பகைவன் வந்துவிட்ட மாதிரி ஒருவனுக்குத் தன்னுடைய சிரிப்பும் மகிழ்ச்சியும் அழிந்து போகின்றன. அதை உடனே அடக்காவிட்டால் பகைவனைப் போன்ற அக்கோபம் மேலும் பகைவன் செய்யக்கூடிய அழிவுகளைச் செய்து விடும்.

கோபமானது தன்னுடைய இன்பத்தை உடனே அழித்துப்பின்னால் துன்பமும் தருவதால் ஒருவன் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் மனத்தில் கோபம் உதித்த உடனே அடக்கிவிட வேண்டும். அடக்காவிட்டால் அக்கோபம் தன்க்கே அழிவு செய்யும்.

பாலு அவர்களின் விளக்கம்:
கோபத்தோடு எழுந்திருப்பவன் நட்டத்தோடு உட்காருவான் என்பது பழமொழி. அந்தக்கருத்தைத்தான் இந்த குறள் சொல்லுது. ஒருவரோட கோபம் பல துயரம். ஒரு அதிகாரியின் கோபம் அவரோட ஊழியரைப்பாதிக்கும், அந்த ஊழியரின் கோபம் அவரின் மனைவியை பாதிக்கும், மனைவியின் கோபம் குழந்தைகளைப் பாதிக்கும்,
இது நமக்கு தேவையா? ஒருத்தோரட கோபத்தாலே ஒரு குடும்பமே பாதிக்கப்படலாம்
ஒரு நாட்டோட கோபம் யுத்தத்தை உண்டாக்கலாம், ஹைப்பர் டென்சன், ரத்தக்கொதிப்புக்கு காரணமே அந்த கோபம் தான். கோபத்தை தவிர்த்தால் நமக்கு லாபம் தான். கோபமென்ற போது சாதரணமா ஒவ்வொரு மனுசனுக்கும் வீட்டல ஒரு லட்சனம் தான். அந்த கோபத்தை எப்போ உபயோகிக்கனும் எப்போ அத பயன்படுத்திக்கனுன்றத கூட கோபத்தாலே நடிக்கலாம். கோபத்தை நடிச்சு காட்றது கூட சில டைம்ல சில பேருக்கு புரியல நான் சொல்ற விஷயம். கோபத்தை நம்மக்கிட்ட பர்மெண்ட்டா வச்சுக்கிட்டா அதனால எவ்வளவு நட்டம், எவ்வளவு கஷ்டம் என்பதை இந்தக்குறல் நமக்கு தெரிவிக்கிறது. கேட்டதுக்கு நன்றி, வணக்கம்.

Get this widget | Share | Track details

Monday, June 11, 2007

உள்ளுவ தெல்லாம்..

Image and video hosting by TinyPic

2.1.22 ஊக்கமுடைமை
2.1.22 ENERGY
குறல் எண் 596: உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
596. Let thoughts be always great and grand
Though they fail their virtues stand

பதவுரை:
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்: மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - (ஊக்கத்தோடு) எண்ணுவதையெல்லாம் உயர்ந்த செயல்களாகவே எண்ண வெண்டும் (உயர்ந்ததல்லாத) மற்றது விலக்கினாலும் விலக்க முடியாத தன்மையுள்ளது. (அதற்கு ஊக்கமுயற்சி வேண்டியதில்லை)

பொழிப்புரை:
ஊக்கம் கொள்ளவேண்டியதெல்லாம் உயர்வானதல்ல காரியங்களூக்காத்தான்; உயர்ந்தல்லாத கீழான எண்ணத்திற்கு ஊக்கமே வேண்டீயதில்லை. ஏனெனில் அது விலக்கினாலும் விலக்க முடியாதபடி இயல்பாகவே நம்மிடத்தில் இருக்கிறது.

விளக்கம்:
இக்குறல் அரசனுக்கு மட்டும் சொன்னதாகக்கொண்டு. ஒரு அரசன் தன்னுடைய உயர்வையே கருதவேண்டும் என்பது வள்ளுவர் கருத்துக்குச் சிறிதும் பொருந்தாது, மேலும் அப்படிக் கொள்வது பயனற்றது.மனித சுபாவத்தில் கீழ்தரமான ஆசைகளும் அவற்றிற்கான துடிப்புகளூம் நிறைந்திருக்கின்றன. எவ்வளவு தள்ளினாலும் அவை தள்ளமுடியாத தன்மையுள்ளவை. அவைகளை என்ண ஊக்கமோ முயற்சியோ வேண்டியதில்லை. மேலும் அவற்றால் ஒருவனுக்கு உயர்வு கிடைக்காது. உயர்வு கொடுக்ககூடியவை நல்ல காரியங்களே, அவற்றைச் செய்யத்தான் ஊக்கமும் முயற்சியும் மேற்கொள்ளவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு உயர்வான காரியங்களை எண்ணு கின்றோமோ அவ்வளவுகவ்வளவு பெருமை கிடைக்கும் என்று முன் குறளில் (595) சொல்லப்பட்டதனால் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்று இங்கே வலியுறுத்துகிறார். ஊக்கமுடையவர்கள் இடையூறுகளுக்கு அஞ்சிவிட மாட்டார்கள்.

Get this widget | Share | Track details

Sunday, June 3, 2007

செல்வத்துட் செல்வஞ்

Photo Sharing and Video Hosting at Photobucket

கேள்வி
LISTENING
குறள்: 411.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

411: Wealth of wealths is listening's wealth
It is the best of wealths on earth.
பதவுரை:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - செல்வங்களூக்குள் சிறந்த செல்வம் நல்ல அறிவுரைகளைகேட்டல், அந்த இன்பம் மற்ற எல்லாச் செல்வ இன்பங்களிலும் சிறந்தது.

பொழிப்புரை:
மக்கள் விரும்பி அடையத்தகுந்த செல்வங்கலீல் சிறந்த செல்வம் கேள்வி இன்பம், அந்த இன்பம் மற்ற செல்வ இன்பங்களூக்கெல்லாம் சிறந்தது.

விளக்கம்:
ஒருவன் தானே கற்றவனாக இருந்தல்லும் தான் கல்லாத பல நூல்களிலுள்ள அறிவைப் பிறர் சொல்லக்கூடும். வெவ்வேறு அறிஞர்கள் இவன் அறியாத வெவ்வேறு நூல்களிலிருந்து புதுப்புது அறிவுரைகளைச் செல்லக்கூடும். மேலும் இவன் கற்ற நூலையே வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு அனுபவங்களுடன் விளக்ககூடும். அப்படிப்பட்ட அறுவுரைகளைக் கேட்க்கும்போது இவனுக்கு மிகச்சிறந்த இன்பமுண்டாகு. 'செல்வம்' என்பது இங்கே பொருட்செல்வம் அல்ல, 'பாக்கியம்' 'இன்பம்' என்ற அர்த்தங்களீல் ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது.

அறிவு இன்பமனுபவிப்பதற்கும் ஆன்மா உணர்ச்சி பெறுதற்க்கும் கேள்வியைபோல் உதவக்கூடியது வேறில்லை. அந்த உண்மையை அறிந்தவர்கள், அறிவளீகள் சொல்லும் கல்லுரைகளில் பரவசப்பட்டு அந்த இன்ப உணர்ச்சியில் பசித்துன்பத்தைகூட மறந்துவிடுவார்கள்.

(மக்கள் விரும்பியடைகின்ற) செல்வங்களிற் சிறந்த செல்வம் கேள்வி இன்பம். அந்த இன்பம் மற்றச் செல்வ இன்பங்களுக்கெல்லாம் சிறந்தது.

பாலு அவர்களின் விளக்கம்: நம்முடைய உண்மையான சொத்து என்னென்னா நமக்கு பத்து கார் இருக்கு இருபது ஏக்கர் நிலம் இருக்கு, இல்லைன்ன அஞ்சு மாடி வீடு வெச்சுருக்கேன் நகை இருக்கு நட்டு இருக்கு தங்கம் இருக்கு அப்படின்னு சொல்லலாம் வரலாம் போகலாம்.சாஸ்வதமாக கிடையவே கிடையாது. நம்முடைய செல்வம் செவி செல்வம் அப்படின்றார் நம் வள்ளுவர். ஏன்னா பெரியவர்களின் அனுபவத்தை கேட்கிறது நல்ல விஷயங்களை காதுல போட்டுக்கிறது. அதுமட்டுமே இல்லாம அனுபவத்தில ஈடுபாடு வச்சுக்கிறது அதுதான். யூசுலா சொல்றது இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுற்றோம் அதுமட்டுமே இல்லாம அதோட அர்த்தம் புரிஞ்சு கிட்டு நம் வாழ்க்கைக்கு எப்படி எடுத்துக்கிறோம் என்பது தான் முக்கியமான விசயம். இந்த மாதிரி நல்ல விஷயம் கேட்கிறது கூட அந்த காது கொடுத்த வரமாதான் நாம நினக்கிறோம். அத்தகைய செவி செல்வம் கிடைச்ச பயன நாமெல்லாம் என்ஞாய் பன்னுவோம். இவங்கெல்லாம் கொடுக்கிற அமிர்தத்தை நம்ம கேட்டு மகிழ்வோம்.

Get this widget | Share | Track details

உடுக்கை இழந்தவன்

Image and video hosting by TinyPic

நட்பு
FRIENDSHIP
குறள் எண்: 788.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

788: Friendship hastens help in mishaps

பதவுரை: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு - இடையிற் கட்டிய ஆடை நழுவிவிட்ட ஒருவனுடைய மை தானாகவே உடனே சென்று மானங்காக்க உதவுதல் போல் நண்பனுக்கு ஒரு துன்பம் என்ற உடனே ஒடி துன்பத்தை நீக்குவதுதான் நட்பு.

பொழிப்புரை: இடையிற் கட்டிய ஆடை கழுவிவிட்ட ஒருவருடைய கை அவரறியாமலும் உடனே ஆடையை அணைத்து மானங்காப்பதைப்போல நண்பனுக்கு துன்பம் வந்த்விட்டதை அறிந்த அக்கணமே அவர் கேளாமலும் தானே ஓடி துன்பத்தை நீக்குவது தான் நட்பாகும்.

விளக்கம்: 'உடுக்கை' - இடையிற் கட்டிய ஆடை. 'இழத்தல்' என்பதற்கு இங்கே 'நழுவதல்' என்பது பொருள் , ஆங்கே - அப்போதே, ஆடை நெகிழ்ந்த அக்கணமே ஒருவனுடைய கை தானாகச்சென்று உதவுதல் போல, துன்பம் வந்துவிட்டதை அறிந்த அக்கணமே தானாக ஓடித் துபம் நீங்க உதவுகின்றவனே நண்பன் - என்பது கருது.

நல்ல நண்பன் துன்பக்காலத்தில் எவ்விதம் உதவுவான் என்றால் இடுப்பிலுள்ள ஆடை நழுவி விட்ட ஒருவனுடைய கை அவனறியாமலும் உடனே ஆடையை அணைத்து மானம் காப்பதைப்போல. நண்பனுக்குத் துபம் வந்துவிட்டதை அறிந்த அக்கணமே அவன் அறியாமலும் தானே ஓடித்துன்பத்தை நீக்குவத்தான் நட்பாகும்.

பாலுவின் விளக்கம்: மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஷிப், நட்பு என்பது கற்பைப்போன்றதாகும். நண்பனிடம் நல்லதும் கெட்டது எது நடந்தாலும் அவருடன் இருந்து அவன் கேளாமலே உதவுவது தான் நல்ல நட்பு நல்ல இசையும் நல்ல ரசனையும் இணைந்து இருப்பது போன்றது தான் நட்பு என்ற கருத்தை சொல்கிறது இந்த குறள்.

Get this widget | Share | Track details

Hyderabad Meet Photos Slide Show