SPB VOICE IS OUR SOUL CHOICE: Please Donate to Charitable Foundation

SPB VOICE  IS  OUR   SOUL  CHOICE:  Please Donate to Charitable Foundation

Tuesday, July 10, 2007

பெருக்கத்து வேண்டும்

Photo Sharing and Video Hosting at Photobucket

மானம்
963 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு..

HONOUR
963 Be humble in prosperity
In decline uphold dignity.

பதவுரை:
பெருக்கத்து பணிதல் வேண்டும், சிறிய கருக்கத்து உயர்வு வேண்டும் - செல்வம் பெருகி இருக்கும்போது பணிவுடையவராக இருக்க வேண்டும், குறைவாகிய வறுமையுள்ள காலத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

பொழிப்புரை:
செல்வம் நிறைந்தவர்களாக இருக்கும் பொது யாரிடத்தும் பணிவுடையவர்களாக நடந்துக்கொள்ளவேண்டும் சிறுமை தரக்கூடிய தரித்திரமுள்ளவர்களாக இருக்கும் போது (அதற்காக பணிந்துவிடாமல்) நிமிர்ந்து நின்று சமாளிக்க வேண்டும் (என்பஹ்டு மானமுடைமை).

விளக்கம்:
பெருக்கம் - செல்வப்பெருக்கம், பணிதல் - இன்சொல், இனிய முகம் உடையவராக வணங்கி நடத்தல், உயர்வு - பணமில்லாமையால் வரக்கூடிய தாழ்வு மனப்பான்மையை அடக்கி உயர்வு மனப்பான்மை கொள்ளல், சிரிய சுருக்கம் - சிறுமை உண்டாக்கிவிடக்கூடிய ஏழ்மை. செல்வமுடையவர்களாக இருக்கும் போது அகங்கரித்துவிடாமல் யாரிடத்தும் பணிவாக நடந்துகொள்வது, ஏழையாக இருக்கும்போது அதைக்கருதி யாருக்கும் அடிமைப் பட்டுவிடாமலும் அஞ்சாமலும் கெஞ்சாமலும் இருப்பதும் மானமுடைமை - என்பது கருத்து.

மானம் என்பது செல்வப் பெருக்கத்தையும் செல்வச் சுருக்கத்தையும் பொருட்படுத்தாமல் கொள்கையை விடாமல் நிற்கின்ற உயர்ந்த நிலை, அந்த நிலையிலிருந்து தவறியவர்கள்.

மானம் என்பது அகங்காரமன்று செல்வம் பெருகியிருக்கும் போது எல்லாருக்கும் பணிவாக நடந்து கொள்வதும். ஏழையாகிவிட்ட போது அதற்காகப் பிறருக்கு வனங்காமல் நிமிர்ந்து நின்று வறுமையைத் தாங்குவதுந்தான் மானம்.

பாலு அவர்களின் விளக்கம்:

காசு வந்தா சில பேருக்கு face மாறிப்போயிடும், தரைய பார்த்து நடக்கமாட்டாங்க ராத்திரி பத்து மணிக்கு கூலிங்க்ளாஷ் போட்டுக்குவாங்க, மினரல் வாட்டர்ல தான் குளிப்பாங்க, இததான் பெரியவங்க "அற்பனுக்கு பவுசு வந்த அர்த்த ராத்திரியிலே குடை பிடிப்பான்" என்று சொல்வாங்க. இவங்களூக்காக தான் வள்ளுவர் குறாளைச்சொல்றார். பணம் வரும் போது பணிவாக இருத்தல். பணம் மட்டுமல்ல safety அந்த போதைக்கூட பார்க்கறது ரொம்ப கஷ்டமான விசயம். அதுகூட தவிர்க்கனுனா பணிவா இருக்கனும். அப்பதான் கஷ்டம் வரும் போது நிமிர்ந்து நிற்க முடியும் so பணிவே நம் பண்பாடு. நன்றி.


Get this widget | Share | Track details

3 comments:

usha said...

Hi Ravi Sir,

as usual kural-in artham ellorukkum elimayaga puriyumbadi namma S.P.B.Sir arpudama chinna pasangalukkum puriyumbadi vilakki irukkar. panam irundalum, illavittalum,aduthavangalukku kodukkum mariyadai enrume maara koodaadu. panathinaal oruvanukku nambikkai varakkoodadu. avan mel avanukku thannabikkai eppozhudum irukkanum, panam irundalum, illainaalum. Romba nanri Sir.

magisivappa said...

இந்தக்குறளைப் படிக்கையில் எனக்கு ரவீந்த்ரநாத்தாகூரின் வரிகள் நினைவுக்கு வருகின்றது. குறளின் இரண்டாம் பகுதி எழ்மை மனதில் இருக்கக்கூடாது, ஏழைக்கும் சுயகௌரவம் வேண்டும் என்பதாகும். இதையே ரவீந்த்ரநாத்தாகூர்
"Strike Strike at the root of penury in my heart",
"Give me the strength never to bend by head before insolent mights" எனக்கூரியுள்ளார்.

அதே சமயம் இதைப்போல் நல்லவிஷயங்களை நல்லவர் வாயிலிருந்து கேட்கையில் கேள்விஞானம் பெருகுகிறது.

Covai Ravee said...

மகி மேடம், உஷா மேடம் அவர்களே

இரண்டு பேரும் நூறு சதவீதம் சரியா சொன்னீங்க.

//அதே சமயம் இதைப்போல் நல்லவிஷயங்களை நல்லவர் வாயிலிருந்து கேட்கையில் கேள்விஞானம் பெருகுகிறது. //

தங்களைபோல படித்தவர்கள் அதை மறுமொழிவதும் கேட்பவருக்கு இன்னும் கேள்வி ஞானம் பெருகும். நன்றி.

Hyderabad Meet Photos Slide Show